92 ரன்களுக்கு சுருண்டது பெங்களூரு: கொல்கத்தா மிரட்டல் பந்துவீச்சு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
92 ரன்களுக்கு சுருண்டது பெங்களூரு: கொல்கத்தா மிரட்டல் பந்துவீச்சு!


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். பிரசித் கிருஷ்ணா பந்தில் பவுண்டரி அடித்த கோலி அதே ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, படிக்கல் மற்றும் ஸ்ரீகர் பரத் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால், ரன் ரேட் மந்தமாகவே இருந்தது.

படிக்கல் 22 ரன்கள் எடுத்திருந்தபோது லாக்கி பெர்குசன் வீசிய பவர் பிளேவின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, அந்த அணி சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

ஆண்ட்ரே ரஸல் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தில் பரத் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 4-வது பந்தில் ஏபி டி வில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே போல்டானார்.

இதன்பிறகு, கிளென் மேக்ஸ்வெல் (10), வனிந்து ஹசரங்கா (0) ஆகியோரை வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார். 

இதன்பிறகு, தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தன. ரஸல் வீசிய 19-வது ஓவரின் கடைசி பந்தில் முகமது சிராஜ் 8 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com