

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 19வது ஆட்டம் மும்பை பிர்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர். முதலில் களமிறங்கிய பிரித்வி ஷா, டேவிட் வார்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடத் தொடங்கினர். இருவருமே அரை சதம் கடந்தனர். டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்களையும், பிரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கியவர்களில் ரிஷப் பந்த் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த அக்சார் பட்டேலும் (22), ஷர்துல் தாக்குரும்(29) ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
முடிவில் தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அஜிங்கியா ரஹானே, வெங்கடேஷ் அய்யர் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
ரஹானே 8 ரன்களுடனும், வெங்கடேஷ் 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணிக்குத் தேவையான ரன்கள் சற்று கூறியது.
எனினும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும், தில்லி அணியின் அபார பந்து வீச்சால் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
முடிவில் கொல்கத்தா அணி 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.