எப்படி போட்டாலும் சிக்ஸர்: பெங்களூருவுக்கு எதிராக உத்தப்பா, துபே வெறியாட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னைக்கு இந்த முறையும் தொடக்கம் சுமாராகவே அமைந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா மற்றும் மொயீன் அலி பொறுமை காட்டியதால் பவர் பிளே முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

பவர் பிளே முடிந்தவுடன் மொயீன் அலியும் 3 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

இதன்பிறகு, உத்தப்பாவுடன் ஷிவம் துபே இணைந்தார். துபே அவ்வப்போது சிக்ஸர் பவுண்டரி அடிக்க உத்தப்பா நேரம் எடுத்துக்கொண்டார். 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு இந்த இணை 50 ரன்கள் சேர்த்த பிறகு, சிக்ஸர் மழையைப் பொழியத் தொடங்கினர். கிளென் மேக்ஸ்வெல் வீசிய 14-வது ஓவரில் உத்தப்பா மட்டும் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதனால், ரன் ரேட் நன்றாக உயர்ந்தது.

உத்தப்பா 33-வது பந்திலும், ஷிவம் துபே 30-வது பந்திலும் அரைசதத்தைக் கடந்தனர். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறக்க ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 13 ரன்களுக்கு மேல் கிடைத்தன. முகமது சிராஜ் வீசிய 17-வது ஓவரில் 18 ரன்கள், ஆகாஷ் தீப் வீசிய 18-வது ஓவரில் 24 ரன்கள் விளாச சென்னையின் ரன் ரேட் ஓவருக்கு 10-ஐ தாண்டியது.

19-வது ஓவரை வனிந்து ஹசரங்கா வீசினாலும் உத்தப்பா மற்றும் துபே தலா 1 சிக்ஸரை பறக்கவிட்டனர். ஆனால், அதே ஓவரில் உத்தப்பா ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உள்பட 88 ரன்கள் விளாசினார். கேப்டன் ரவீந்திர ஜடேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ஹேசில்வுட்டின் கடைசி ஓவரில் துபே 2 சிக்ஸர்களை விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்திருக்கக்கூடும்.  ஆனால், டு பிளெஸ்ஸி கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 95 ரன்கள் எடுத்தார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com