ஷிகர் தவான் அதிரடி அரைசதம்: சென்னைக்கு 188 ரன்கள் இலக்கு

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. 
ஷிகர் தவான் அதிரடி அரைசதம்: சென்னைக்கு 188 ரன்கள் இலக்கு
Updated on
1 min read

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. 

ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கேப்டன் மயங் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 

ஆனால் மயங் அகர்வால் சோபிக்கவில்லை. அவர் 21 பந்துகளில் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து ராஜபக்ச களமிறங்கினார். தவான், ராஜபக்ச இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 110 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜபக்ச 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் களம்கண்ட லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடினார். அவர் 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com