
மும்பை: டைஃபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா குணமடைந்து அணிக்கு திரும்பினார்.
இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் 259 ரன்கள் எடுதுள்ளார். அவருடைய அதிகபட்சமான ரன் 61. இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார். காய்ச்சல் காரணமாக கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
டெல்லி அணி ட்விட்டரில் தெரிவித்ததாவது: டைஃபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் இருந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார். ஹோட்டலில் உள்ள ப்ரித்வி ஷா எங்களது மருத்துவக் குழுவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்.
12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் 5வது இடத்தில் உள்ளது டெல்லி அணி. வரும் திங்கள் கிழமை பங்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.