படிக்கல் கலக்கல்: லக்னெள அணிக்கு 179 ரன்கள் இலக்கு

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 179 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது. 
ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்
Published on
Updated on
1 min read


லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 179 ரன்களை இலக்கான நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 63 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இதனைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் அதிரடி தொடக்கத்தை வெளிப்படுத்தினர்.  ஆனால் பட்லர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதனைத் தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் இணையமைத்த சஞ்சு சாம்சன், 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். ஜெய்ஸ்வால் அரை சதம் கடப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 29 பந்துகளுக்கு 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதனைத் தொடர்ந்து வந்த ரியான் பராக் 19 ரன்களையும், நீஷம் 12 பந்துகளில் 14 ரன்களையும் எடுத்தனர். எனினும் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் அவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த அஸ்வின் 10 ரன்களையும், போல்ட்  9 பந்துகளுக்கு 17 ரன்களையும் எடுத்தனர். 

முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com