ஐபிஎல் 2022: கடைசி இடம் மும்பை இந்தியன்ஸ் சென்னை தப்பித்தது

மும்பை : ஐபிஎல் தொடரின் 65வது லீக் சுற்றில் விளையாடிய மும்பை ஹைதராபாத்திடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்தது. 
ஐபிஎல் 2022: கடைசி இடம் மும்பை இந்தியன்ஸ் சென்னை தப்பித்தது
Updated on
1 min read

மும்பை : ஐபிஎல் தொடரின் 65வது லீக் சுற்றில் விளையாடிய மும்பை ஹைதராபாத்திடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்தது. 

இரண்டு வலுவான அணிகளும் (சி.எஸ்.கே. , எம்.ஐ. ) இந்த 2022 ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வருவது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. என்றாலும் சென்னை மும்பை அணிக்கு எங்கு இருந்தாலும் போட்டி விடுவதில்லை. இந்த வருடம் அந்த போட்டி கடைசி இடத்துக்காக உள்ளது. 

நேற்று ( மே-17) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தனது ப்ளே ஆஃப் தகுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 

அதே சமயத்தில், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை தக்கவைத்துக் கொண்டது. 13 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்று 6 புள்ளிகளுடன் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது. 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை 13 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. 

இரு அணிகளுக்கும் மீதமிருக்கும் ஒரு போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றாலும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றாலும் மும்பை தான் கடைசி இடத்தில் இருக்கும். ஒருவேளை சென்னை மோசமாக தோல்வியடைந்து மும்பை அபாரமாக வெற்றி அடைந்தால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் சென்னை கடைசி இடத்திற்கு கீழிறங்கும். இதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு தான் என்றாலும் கிரிகெட்டைப் பொருத்தவரை எதுவும் நடக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com