வில்லியம்சன் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார்

மும்பை : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் என அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
வில்லியம்சன்
வில்லியம்சன்
Updated on
1 min read

மும்பை : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் என அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

வில்லியம்சன் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் நியூசிலாந்து செல்வதால் கடைசிப் போட்டியில் அவர் விளையாடமாட்டர் என அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்  நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது :  அவரது குழந்தையைப் பார்க்க நமது கேப்டன் நியூசிலாந்து பயணிக்க இருக்கிறார். பாதுகாப்பாக குழந்தையை பெற்றெடுத்தமைக்கும் அவர்களது மகிழ்ச்சிக்கும் வில்லியம்சன் மற்றும் அவரது மனைவிக்கும் அணியின் சார்பாக வாழ்த்துகள். 

கடைசிப் போட்டியில் வெற்றியடைந்தால் ப்ளே ஆஃப் போவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில் வில்லியம்சனின் இந்த பயணம் பாதிப்பை உண்டாக்குமா?  

13 போட்டிகளில் 216 ரன்களை மட்டுமே வில்லியம்சன் எடுத்திருக்கிறார். அதனால் பேட்டிங்கில் பெரிதாக பாதிப்பு இல்லையெனினும் அவரது கேப்டன்ஸி மற்றும் ஃபீல்டிங்கை ஹைதராபாத் கண்டிப்பாக மிஸ் செய்யும்  என ஹைதராபாத் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com