ரஸ்ஸல் அதிரடி: பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா

ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ரஸ்ஸல் அதிரடி: பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா

ஆண்ட்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் நடப்பு சீசனின் இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங் அகர்வால், தவான் ஆகியோர் களமிறங்கினர். 

ஆனால் மயங் அகர்வால் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து தவான் 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராஜபக்ச அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். லியாம் லிவிங்ஸ்டோனும் தன்பங்கிற்கு 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 

கடைசி வரிசையில் களமிறங்கிய ரபாடா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 4, டிம் சௌதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹானே 12 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்த சிறுது நேரத்திலேயே கேப்டன் ஷ்ரேயாஸ் 26, ராணா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க 7வது ஒவரில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.

ரஸ்ஸலும், சாம் பில்லிங்ஸும் நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில், ரஸ்ஸல் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்ப பஞ்சாப் கையிலிருந்த வெற்றி கொல்கத்தா பக்கம் திரும்பியது. 

15வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான 141 ரன்களை எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ரஸ்ஸல் 70 ரன்கள்(31 பந்துகள்), பில்லிங்ஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்திற்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com