குஜராத் அணிக்கு 2ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.
குஜராத் அணிக்கு 2ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.

புணேவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. குஜராத் பேட்டிங்கில் மேத்யூ வேட் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தாா். உடன் வந்த ஷுப்மன் கில் நிலைத்து ஆடி ரன்கள் சோ்த்தாா். எனினும் அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

விஜய் சங்கா் 1 பவுண்டரியுடன் 13, கேப்டன் ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து வெளியேற, ஷுப்மன் கில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா். ராகுல் தெவாதியா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, அபினவ் மனோஹா் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் டேவிட் மில்லா் 2 பவுண்டரிகளுடன் 20, ரஷீத் கான் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3, கலீல் அகமது 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தனா்.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் 3 ரன்களிலும், பிரித்வி ஷா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மன்தீப் சிங் - பண்ட் ஜோடி சற்று நிலைத்து விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

எனினும், மன்தீப் 18 ரன்களில் அவுட்டாக, மறுமுனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் பண்ட் 43(29 பந்து) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 

தொடர்ந்து களமிறங்கிய லலீத் யாதவ் 25, பவல் 20, அக்ஷர் படேல் 8, ஷர்துல் 2, குல்தீப் 14, கலீல் அகமது ரன் ஏதும் எடுக்காமல் குஜராத் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே டெல்லி அணியால் எடுக்க முடிந்தது. குஜராத்தின் லாக்கி பெர்குசன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com