நடு ஓவர்களில் சொதப்பும் சிஎஸ்கே, அசத்தும் ராஜஸ்தான்!

இந்த வருடம் நடு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்திருப்பது பயமறியா ராஜஸ்தான் அணி தான்
நடு ஓவர்களில் சொதப்பும் சிஎஸ்கே, அசத்தும் ராஜஸ்தான்!

ஐபிஎல் 2022 போட்டி 2-வது வாரத்தை எதிர்கொண்டுள்ளது. முதல் வாரத்தில் ஐபிஎல் அணிகள் தங்கள் பேட்டிங்கை எப்படி வடிவமைத்துள்ளன என்று பார்த்தால் சில ஆச்சர்யங்கள் தென்படுகின்றன. 

பவர்பிளேவுக்குப் பிறகு வரும் நடு ஓவர்களில் (7-16) இந்தமுறை அதிக ரன்கள் கிடைத்து வருகின்றன. கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடும் உத்திக்குப் பதிலாக நடு ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடும் பக்குவத்தை அணிகள் அடைந்துள்ளன. 

இந்தமுறை 7 முதல் 16 ஓவர்களில் சராசரியாக ஒரு ஓவருக்கு 8.25 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2018-ல் 8.12 என நடு ஓவர்களில் சராசரி இருந்தது. வட்டத்துக்கு வெளியே 5 பேர் இருந்தாலும் அணிகள் அதிக ரன்கள் எடுக்கத் தயங்குவதில்லை. 

இந்த வருடம் நடு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்திருப்பது பயமறியா ராஜஸ்தான் அணி தான். நடு ஓவர்களில் ஒரு ஓவருக்கு 10.05 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி (9.10), லக்னெள (9.10) அடுத்த இடங்களில் உள்ளன. 

நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்காததால் தான் சிஎஸ்கே அணி, இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ளது. தொடர்ச்சியாக மூன்று தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளது. சிஎஸ்கே, நடு ஓவர்களில் ஒரு ஓவருக்கு 7.16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

ஐபிஎல் 2022: நடு ஓவர்களில் அதிக ரன்ரேட்டைக் கொண்டுள்ள அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் - 10.05
ஆர்சிபி - 9.10
லக்னெள - 9.10
தில்லி - 9.10
குஜராத் - 8.05
மும்பை - 7.85
சன்ரைசர்ஸ் - 7.80
கேகேஆர் - 7.71
பஞ்சாப் - 7.36

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com