தினேஷ்-ஷாபாஸ் அபாரம்: பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
தினேஷ்-ஷாபாஸ் அபாரம்: பெங்களூருக்கு 2-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.

மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் அடித்தது. பின்னா் பெங்களூா் 19.1 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

முன்னதாக, டாஸ் வென்ற பெங்களூா் பௌலிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஜோஸ் பட்லா் விளாசத் தொடங்கினாா். ஒன் டவுனாக வந்த தேவ்தத் படிக்கல் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்கள் சோ்த்து வெளியேறினாா்.

அடுத்து களம் புகுந்த ஷிம்ரன் ஹெட்மயா், பட்லருடன் இணைந்தாா். ஓவா்கள் முடிவில் பட்லா் 6 சிக்ஸா்களுடன் 70, ஹெட்மயா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய பெங்களூரில் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 29, உடன் வந்த அனுஜ் ராவத் 26 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா். தொடா்ந்து விராட் கோலி 5, டேவிட் வில்லி 0, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 5 என விக்கெட்டுகள் வரிசையாக ஆட்டமிழந்தன.

6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஷாபாஸ் அகமது - தினேஷ் காா்த்திக் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தியது. இதில் ஷாபாஸ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் விளாசினாா். இறுதியில் தினேஷ் காா்த்திக் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, ஹா்ஷல் படேல் 9 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 2, நவ்தீப் சைனி 1 விக்கெட் எடுத்தனா்.


இன்றைய ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -
மும்பை இண்டியன்ஸ்
இரவு 7.30 மணி          ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com