பயிற்சியின்போது சரியாக விளையாடாத கம்மின்ஸா இது?: ஷ்ரேயஸ் ஐயர் ஆச்சர்யம்

பயிற்சியின்போது சரியாக விளையாடாத பேட் கம்மின்ஸ், மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடியது பற்றி ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்
ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

பயிற்சியின்போது சரியாக விளையாடாத பேட் கம்மின்ஸ், மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடியது பற்றி ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் கேகேஆர் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது. 

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 33 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்கிற நிலையில் மறக்க முடியாத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பேட் கம்மின்ஸ். இந்த வருட ஐபிஎல் போட்டியில் நேற்று தான் அவருடைய முதல் ஆட்டம். டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் (14) அரைசதம் அடித்த சாதனையைச் சமன் செய்துள்ளார் பேட் கம்மின்ஸ்.

கம்மின்ஸ் ஆட்டம் பற்றி கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

அபாரம் பேட் கம்மின்ஸ். அவர் பந்தை அடித்த விதத்தை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் நேற்று, வலைப்பயிற்சியின்போது அவ்வப்போது போல்ட் ஆகிக்கொண்டிருந்தார் கம்மின்ஸ். அவருக்குப் பின்னால் நான் பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். எங்கள் இன்னிங்ஸின் இடைவேளையின்போது வெங்கடேஷ் ஐயர் நிதானமாகவும் பேட் கம்மின்ஸ் எப்போதும் போல பேட்டைச் சுழற்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். நான் விளையாடச் சென்றபோது, வெங்கடேஷ் ஐயர் பந்தை அதிரடியாக விளையாட முயன்று கொண்டிருந்தார். பந்தைச் சரியாக அடித்தாடினால் போதும் என அவருக்குச் சொன்னேன். மேல்வரிசை பேட்டர்களாக நாம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com