டெ‌ல்​லிக்கு 2-ஆவது வெ‌ற்றி

ஐபிஎல் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
டெ‌ல்​லிக்கு 2-ஆவது வெ‌ற்றி

ஐபிஎல் போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் அடித்தது. அடுத்து கொல்கத்தா 19.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லி வீரர் குல்தீப் ஆட்டநாயகன் ஆனார். 

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பெüலிங்கை தேர்வு செய்தது. டெல்லி இன்னிங்ஸில் பிருத்வி ஷா - டேவிட் வார்னர் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

அவர்களில் முதலில் பிருத்வி ஷா 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்க, வார்னர் கடைசி விக்கெட்டாக 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 

இடையே ரிஷப் பந்த் 27, லலித் யாதவ் 1, ரோவ்மென் பாவெல் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவர்கள் முடிவில் அக்ஸர் படேல் 22, ஷர்துல் தாக்குர் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பெளலிங்கில் சுனில் நரைன் 2, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரùஸல் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் ஆடிய கொல்கத்தாவில் ஷ்ரேயஸ் ஐயர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் அடிக்க, நிதீஷ் ராணா 30, ஆண்ட்ரே 24 ரன்கள் சேர்த்தனர்.

வெங்கடேஷ் ஐயர் 18, சாம் பில்லிங்ஸ் 15 ரன்கள் எடுக்க, எஞ்சிய விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. டெல்லி பெüலிங்கில் குல்தீப் யாதவ் 4, கலீல் அகமது 3, ஷர்துல் தாக்குர் 2, லலித் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com