ஐபிஎல் போட்டியில் கரோனா அச்சுறுத்தல் ஆரம்பம்: தனிமைப்படுத்தப்பட்டுள்ள தில்லி அணி வீரர்கள்

தற்போதைய சூழலால் ஐபிஎல் 2022 போட்டிக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் கரோனா அச்சுறுத்தல் ஆரம்பம்: தனிமைப்படுத்தப்பட்டுள்ள தில்லி அணி வீரர்கள்

ஐபிஎல் 2022 போட்டியில் கரோனா அச்சுறுத்தல் ஆரம்பமாகியுள்ளது.

ரிஷப் பந்த் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணி, வரும் புதன் அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக புணேவில் விளையாடவுள்ளது. இன்று புணேவுக்கு தில்லி அணி வீரர்கள் செல்வதாக இருந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் தில்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தற்போது தில்லி வீரர் ஒருவரும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ஆர்டி - பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தில்லி அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது தில்லி அணி. இதனால் தற்போது தில்லி வீரர்கள் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியும் ரத்தாகியுள்ளது. 

கடந்த சனியன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியது தில்லி. அப்போது ஆட்டம் முடிந்த பிறகு தில்லி வீரர்கள் மைதானத்துக்குள் வராமல் அவர்களுடைய இடங்களிலேயே அமர்ந்துகொண்டார்கள். தற்போதைய சூழலால் ஐபிஎல் 2022 போட்டிக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com