5 வெற்றிகளில் 5 வெவ்வேறு ஆட்ட நாயகன்கள்: அசத்தும் குஜராத் அணி

ஐபிஎல் 2022 போட்டியில் முதல் அணியாக 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது...
மில்லர்
மில்லர்

ஐபிஎல் 2022 போட்டியில் முதல் அணியாக 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. 6 ஆட்டங்களை ஆடிய அணிகளில் 5 வெற்றிகளைப் பெற்றிருக்கும் ஒரே அணியும் குஜராத் தான்.

புணேவில் ஞாயிறு அன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத். பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை. குஜராத் கேப்டனாக ரஷித் கான் செயல்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. ருதுராஜ் கெயிக்வாட் 73 ரன்களும் ராயுடு 46 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த குஜராத் அணி, 12.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதன்பிறகு டேவிட் மில்லரும் ரஷித் கானும் அற்புதமாகக் கூட்டணி அமைத்து அணியை மீட்டார்கள். ரஷித் கான் 40 ரன்களும் மில்லர் ஆட்டமிழக்காமல் 94 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக டேவிட் மில்லர் தேர்வானார். அவர் 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்தார். குஜராத் அணி, 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 

குஜராத் அணி பெற்ற 5 வெற்றிகளிலும் வெவ்வேறு வீரர்கள் பங்களித்துள்ளார்கள். இதனால் 5 ஆட்டங்களிலும் ஆட்ட நாயகனாக வெவ்வேறு வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள். 

ஐபிஎல் 2022: ஆட்ட நாயகன் விருது வென்ற குஜராத் வீரர்கள்

1. ஷமி
2. ஃபெர்குசன்
3. கில்
4. பாண்டியா
5. டேவிட் மில்லர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com