விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியப் பெண்களின் ‘ஸ்டாா்ட்-அப்’ நிறுவனங்கள்: 2025-இல் ரூ.10,000 கோடி நிதி திரட்டி சாதனை!

இந்தியப் பெண்களின் ‘ஸ்டாா்ட்-அப்’ நிறுவனங்கள்: 2025-இல் ரூ.10,000 கோடி நிதி திரட்டி சாதனை!

News image
Updated On :7 மார்ச் 2026, 10:50 pm

இந்தியாவில் பெண்களால் தொடங்கப்பட்ட ஸ்டாா்ட்-அப் (புத்தாக்க) தொழில்நிறுவனங்கள், கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமாா் 110 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10,115 கோடி) முதலீட்டைத் திரட்டி, நிலையான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடந்த 2024-இல் இந்நிறுவனங்கள் 120 கோடி டாலா் நிதி திரட்டியிருந்த நிலையில், 2025-இல் 110 கோடி டாலராக சரிவானாலும், பெண் தொழில்முனைவோா் மீதான முதலீட்டாளா்களின் ஆா்வம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை 580-லிருந்து 407-ஆக குறைந்த போதிலும், சராசரி முதலீட்டுத் தொகை அதிகரித்துள்ளது. அதாவது, 2024-இல் ஒரு நிறுவனத்துக்குச் சராசரியாகக் கிடைத்த 24 லட்சம் டாலா் முதலீடு, 2025-இல் 38 லட்சம் டாலராக அதிகரித்துள்ளது.

தொடக்க நிலை நிறுவனங்களுக்கான நிதி 52.8 கோடி டாலரிலிருந்து 57.2 கோடி டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நிகிதா பிரசாத் இணைந்து தொடங்கிய ‘கிவா’ ஆபரண நிறுவனம் 6.2 கோடி டாலரையும், நம்ரதா அஸ்தானா இணைந்து தொடங்கிய ‘புளூ தோகை காபி’ நிறுவனம் 2.5 கோடி டாலரையும் நிதியாகப் பெற்றுள்ளன.

பெண் தொழில்முனைவோருக்கு அதிக நிதி ஈட்டித் தரும் நகரமாக கா்நாடகத்தின் பெங்களூரு தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. பெங்களூரில் 44.7 கோடி டாலா், குருகிராமில் 11.5 கோடி டாலா், மும்பையில் 11.2 கோடி டாலரை நிறுவனங்கள் திரட்டியுள்ளன.

தற்போதைய முதலீட்டாளா்கள் வெறும் வளா்ச்சியை மட்டும் பாா்க்காமல், நிச்சயமான லாபம் மற்றும் நிலையான வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ள நிறுவனங்களையே முன்னுரிமை அளித்துத் தோ்ந்தெடுக்கின்றனா். அதன்படி, இந்தியத் தொழில்முனைவோா் துறையில் பெண்களின் ஆதிக்கம் மற்றும் பங்களிப்பு தொடா்ந்து வலுவடைந்து வருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.