மாலிக்,மார்க்ரம் அசத்தல்: ஹைதராபாத் வெற்றிநடை

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ûஸ வீழ்த்தியது. 
மாலிக்,மார்க்ரம் அசத்தல்: ஹைதராபாத் வெற்றிநடை

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ûஸ வீழ்த்தியது. 

நவி மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் பெüலர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகன் ஆனார். 

பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கால் விரல் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களம் காணவில்லை. அவருக்குப் பதிலாக பிரப்சிம்ரன் சிங் அணியில் இணைய, ஷிகர் தவன் தலைமை தாங்கினார். 

டாஸ் வென்ற ஹைதராபாத் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸில் லியாம் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக ஷாருக் கான் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 26, ஓடின் ஸ்மித் 1 சிக்ஸருடன் 13 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தன. 

ஹைதராபாத் பெüலிங்கில் உம்ரான் மாலிக் 4, புவனேஷ்வர் குமார் 3, நடராஜன், ஜெகதீசா சுசித் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதில் மாலிக் கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் ஆடிய ஹைதராபாதில் அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்கள் சேர்க்க, கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒன் டவுனாக வந்த ராகுல் திரிபாதி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து வந்த எய்டன் மார்க்ரம்-நிகோலஸ் பூரன் கூட்டணி ஹைதராபாதை வெற்றிக்கு வழி நடத்தியது. முடிவில் மார்க்ரம் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41, பூரன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ராகுல் சஹர் 2, ககிசோ ராபாட 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com