கைகொடுத்த சஹாலின் ஹாட்ரிக்: கொல்கத்தாவை வென்றது ராஜஸ்தான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கைகொடுத்த சஹாலின் ஹாட்ரிக்: கொல்கத்தாவை வென்றது ராஜஸ்தான்


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.

அதிரடியாக ஆடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் 103 ரன்களும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களான பேட் கம்மின்ஸ், ரஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டையும்  சுனில் நரேன்  2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர், 218 ரன்கள் என்கிற பெரிய இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரேன் ரன் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 58 ரன்களிலும் ஷ்ரேயஸ் ஐயர் 85 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பின்,  16 ஆவது ஓவர் வீசிய சஹால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததுடன் அதே ஓவரில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

கடைசி வரை நம்பிக்கை அளித்த  உமேஷ் யாதவ் ராஜஸ்தான் பந்துவீச்சிற்கு அழுத்தம் கொடுத்தாலும் 2 பந்துகள் மீதமிருக்க 21 ரன்களில் இறுதி விக்கெட்டாக  அவுட் ஆனார்.

இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவரில் 210 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால்,   7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

சஹால் 5 விக்கெட்களையும், ஓபேட் மெக்காய் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com