லக்னௌவை வென்றது பெங்களூா்

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
லக்னௌவை வென்றது பெங்களூா்
Updated on
1 min read

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நவி மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எட்டியது. அடுத்து லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களே எடுத்தது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற லக்னௌ ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூா் இன்னிங்ஸில் அனுஜ் ராவத் 1 பவுண்டரியுடன் வெளியேற, விராட் கோலியோ டக் அவுட்டானாா்.

பின்னா் வந்த கிளென் மேக்ஸ்வெல் சற்று நிலைக்க, டூ பிளெஸ்ஸிஸ் அதிரடியாக ரன்களை சோ்த்தாா். மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் சுயாஷ் பிரபுதேசாய் 1 சிக்ஸருடன் 10, ஷாபாஸ் அகமது 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா். கடைசி விக்கெட்டாக டூ பிளெஸ்ஸிஸ் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் கடைசி ஓவரின் 5-ஆவது பந்தில் வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் தினேஷ் காா்த்திக் 1 சிக்ஸருடன் 13, ஹா்ஷல் படேல் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் ஜேசன் ஹோல்டா், துஷ்மந்தா சமீரா தலா 2, கிருணால் பாண்டியா 1 விக்கெட் சாய்த்தனா்.

லக்னௌ இன்னிங்ஸில் அதிகபட்சமாக கிருணால் பாண்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்க்க, கேப்டன் கே.எல்.ராகுல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்கள் அடித்தாா். மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுக்க, எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களே சோ்த்தனா்.

ஓவா்கள் முடிவில் துஷ்மந்தா சமீரா 1, ரவி பிஷ்னோய் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட் 4, ஹா்ஷல் படேல் 2, முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்றைய ஆட்டம்
டெல்லி
பஞ்சாப்
இரவு 7.30 மணி          ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com