ஆட்டத்தை முடித்துவைத்த தோனி: மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி
தோனி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி20 போட்டியின் 33 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, இஷாந்த் கிஷன் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த பிரேவிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யகுமார் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ஹிரித்திக் 25 ரன்களை சேர்த்தார்.

முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும், அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தின.

தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த மிட்செல், ராபின் உத்தப்பாவுடன் கைக்கோர்த்தார்.

எனினும் சாம்ஸ் பந்தில் மிட்செல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த அம்பத்தி ராயுடு அதிரடி காட்ட 35 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். 

உத்தப்பா 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதனையடுத்து வந்த ஷிவம் தூபே (13), ரவீந்திர ஜடேஜா (3), சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் பின்னர் களமிறங்கிய தோனி பெட்டோரியோஸ் உடன் அதிரடியாக விளையாடினார். எனினும் அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிராவோ களமிறங்கினார். இக்கட்டான சூழலில் தோனி தனது பாணியில் சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். 

நெருக்கடி ஓவர்: நிதானி தோனி

கடைசி ஓவரில் இரண்டாவது பந்தில், பிராவோ ஒரு ரன் எடுத்தார். இதனால் மறுமுனைக்கு வந்த தோனி 4-வது பந்தில் பவுண்டரியை விளாசினார். 5வது பந்தில் 2 ரன்கள் எடுக்க இறுதிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான சூழலிலும் நிதானமாக ஆடிய தோனி கடைசிப் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மும்பை நடப்பு ஐபிஎல்-ல் 7வது முறையாக தோல்வியைத் தழுவியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com