தோனியும் கடைசி ஓவர் வெற்றிகளும்: ஓர் அழகான காதல் கதை!

கடைசி ஓவர்களில் தோனி தொடர்ந்து சாதித்து வருகிறார். இதை அவ்வளவு அழகாக உறுதி செய்கின்றன இந்தப் புள்ளிவிவரங்கள்...
தோனியும் கடைசி ஓவர் வெற்றிகளும்: ஓர் அழகான காதல் கதை!

தோனி கடைசி ஓவரில் இருந்தால் வெற்றி நிச்சயம் என்கிற ஒரு நம்பிக்கை எப்படி ஏற்படுகிறது?

அதெப்படி ஒரு மனிதனால் கடந்த 15 வருடங்களாக இலக்கை விரட்டுவதில் மன்னனாக இருக்க முடியும்? கடைசி ஓவர்களில் துளியும் பதற்றம் இல்லாமல் சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்து வெற்றியைத் தர முடியும்? தோனிக்கு நிகராக ஒரு வீரரைக் கூற முடியுமா? இத்தனை ஆண்டுகள், இத்தனை ஆட்டங்களில் தொடர்ந்து கடைசி ஓவர் வெற்றிகளில் பங்களித்த இன்னொரு வீரர் யார்?

40 வயதிலும் தோனியால் இலக்கைக் கடைசி ஓவரில் வெற்றிகரமாக விரட்ட முடியும் என்றால் அது எவ்வளவு பெரிய தன்னம்பிக்கையை ரசிகர்களுக்குத் தரும்!

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார். சிஸ்கேவின் முகேஷ் செளத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துக் கடைசிப் பந்தில் வெற்றியைப் பெற்று சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தியது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உனாட்கட் ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கேவுக்கு இந்த வருடத்தின் 2-வது வெற்றியை அளித்தார் தோனி. ராயுடு 40 ரன்களும் உத்தப்பா 30 ரன்களும் தோனி ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் எடுத்தார்கள்.

கடைசி ஓவர்களில் தோனி தொடர்ந்து சாதித்து வருகிறார். இதை அவ்வளவு அழகாக உறுதி செய்கின்றன இந்தப் புள்ளிவிவரங்கள்:

(அனைத்து விதமான) டி20 கிரிக்கெட்டில் இலக்கை விரட்டும்போது 20-வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்

தோனி - 26 சிக்ஸர்கள் (121 பந்துகள்)
பொலார்ட் - 19 சிக்ஸர்கள் (107 பந்துகள்)
ஆர். பிரிலிங்க் - 17 சிக்ஸர்கள் (46 பந்துகள்)
ரஸ்ஸல் - 15 சிக்ஸர்கள் (62 பந்துகள்)
டேரன் சாமி - 14 சிக்ஸர்கள் (92 பந்துகள்)

ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டும்போது 20-வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்

தோனி - 24 சிக்ஸர்கள் (91 பந்துகள்)
பொலார்ட் - 9 சிக்ஸர்கள் (47 பந்துகள்)
ஜடேஜா - 7 சிக்ஸர்கள் (43 பந்துகள்)
மில்லர் - 7 சிக்ஸர்கள் (30 பந்துகள்)
ரோஹித் சர்மா - 7 சிக்ஸர்கள் (31 பந்துகள்)

ஐபிஎல் போட்டியில் 20-வது ஓவரில் தோனி எடுத்த ரன்கள் (இலக்கை விரட்டும்போது) 

பந்துகள்- 91
ரன்கள் - 266
ஸ்டிரைக் ரேட் - 292.30
பவுண்டரிகள் - 20
சிக்ஸர்கள் - 24

292.30 ஸ்டிரைக் ரேட்

டி20 கிரிக்கெட்டில் 20-வது ஓவரில் தோனி எடுத்த ரன்கள் (இலக்கை விரட்டும்போது)

121 பந்துகள்
323 ரன்கள்
26 பவுண்டரிகள்
26 சிக்ஸர்கள்

266.94 ஸ்டிரைக் ரேட் 

* ஐபிஎல் போட்டியில் உனாட்கட் பந்துவீச்சில் 43 பந்துகளில் 105 ரன்கள் எடுத்துள்ளார் தோனி

ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டும்போது கடைசி ஓவரில் 15+ ரன்களை எடுத்த தோனி

22 vs பஞ்சாப், 2016 (அக்‌ஷர் படேல்)
18 vs பஞ்சாப், 2010 (இர்பான் பதான்)
16 vs மும்பை, 2022 (உனாட்கட்)

தோனி மட்டுமே இலக்கை விரட்டும்போது மூன்று முறை கடைசி ஓவரில் 15 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். வேறு எந்த வீரரும் ஒருமுறைக்கு மேல் எடுத்ததில்லை. 

ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக வேகமாக 100 ஐபிஎல் ரன்கள் எடுத்த பேட்டர்கள்

42 பந்துகள் - தோனி vs உனாட்கட்
47 பந்துகள் - ரெய்னா vs சந்தீப் சர்மா
47 பந்துகள் - டி வில்லியர்ஸ் vs சந்தீப் சர்மா
47 பந்துகள் - பொலார்ட் vs ஜடேஜா

தோனி vs உனாட்கட்: 20-வது ஓவர்

பந்துகள் - 11
ரன்கள் - 47
ஸ்டிரைக் ரேட் - 427
சிக்ஸர்கள் - 5
பவுண்டரிகள் - 3

ஐபிஎல் போட்டியில் கடைசி நான்கு பந்துகளில் அதிக ரன்கள் (இலக்கை விரட்டும்போது)

17 - குஜராத் vs பஞ்சாப், 2022 (தெவாதியா, மில்லர்)

16 - ஆர்சிபி vs புணே, 2012 (டி வில்லியர்ஸ், எஸ். திவாரி)

16 - புணே vs பஞ்சாப், 2016 (தோனி)

16 - சிஎஸ்கே vs மும்பை, 2022 (தோனி)

ஐபிஎல் போட்டியில் இலக்கை விரட்டும்போது தோனி எடுத்த ரன்கள்

இன்னிங்ஸ் - 84
நாட் அவுட் - 32
மொத்த ரன்கள் - 2041 ரன்கள் (1549 பந்துகள்)
ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் - 84*
அரை சதங்கள் - 10
டக் அவுட் - 1
பவுண்டரிகள் - 134
சிக்ஸர்கள் - 96
ஸ்டிரைக் ரேட் - 131.76

ஐபிஎல்: இலக்கை விரட்டும்போது அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்டர்கள் (குறைந்தது 80 இன்னிங்ஸ்)

தோனி - 32 முறை
தினேஷ் கார்த்திக் - 25 முறை
யூசுப் பதான் - 24 முறை
கோலி - 22 முறை
டி வில்லியர்ஸ் - 21 முறை 

ஐபிஎல்: இலக்கை வெற்றிகரமாக விரட்டும்போது அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்த பேட்டர்கள்

தோனி - 26 முறை
ஜடேஜா - 25 முறை
யூசுப் பதான் - 22 முறை
தினேஷ் கார்த்திக் - 21 முறை
பிராவோ - 20 முறை 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com