ஐபிஎல் போட்டிக்கு வரவேற்பு குறைந்தது ஏன்?: பிரபல தொழிலதிபர் விளக்கம்

ரசிகர்களுக்குப் பிடித்த அணிகளான மும்பையும் சென்னையும் மோசமாக விளையாடி வருகின்றன.
ஐபிஎல் போட்டிக்கு வரவேற்பு குறைந்தது ஏன்?: பிரபல தொழிலதிபர் விளக்கம்

ஐபிஎல் 2022 போட்டிக்குக் குறைவான தொலைக்காட்சித் தரவரிசை கிடைத்தது குறித்து லக்னெள அணி உரிமையாளரின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா கூறியுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

லக்னெள அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா, ஐபிஎல் 2022 போட்டிக்குக் குறைவான தொலைக்காட்சித் தரவரிசை கிடைத்துள்ளது பற்றி தன்னுடைய காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் தொலைக்காட்சித் தரவரிசைக் குறைந்து போனதற்குக் காரணம் - 

* ரசிகர்களுக்குப் பிடித்த அணிகளான மும்பையும் சென்னையும் மோசமாக விளையாடி வருகின்றன.

* விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் இன்னும் அதிக ரன்களை எடுக்கவில்லை.

* ஏராளமான ஆட்டங்கள் அலுப்பை ஏற்படுத்துகின்றன.

* எல்லா ஆட்டங்களும் மும்பையில் நடைபெறுகின்றன. இதனால் ரசிகர்களின் பங்களிப்பு குறைந்து விடுகிறது. 

* 2 வருடங்களாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்த மக்கள் தற்போது வெளியே செல்ல ஆர்வமாக உள்ளார்கள் 

என்று கூறியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com