ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரன்கள் குவிக்கும் கே.எல். ராகுல்

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ராகுல்.
ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரன்கள் குவிக்கும் கே.எல். ராகுல்

அதிக டி20 சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார் கே.எல். ராகுல்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னெள அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த லக்னெள கேப்டன் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ராகுல். 6 சதங்கள் அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். நேற்றைய சதத்தினால் ராகுல் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

ஐபிஎல் போட்டியில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்

விராட் கோலி - 5 (207 இன்னிங்ஸ்)
கே.எல். ராகுல் - 4 (93 இன்னிங்ஸ்)

ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கே.எல். ராகுல்

103*(60)
103*(62)

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்

கே.எல். ராகுல் - 6 (167 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா - 6 (365 இன்னிங்ஸ்)
விராட் கோலி - 5 (317 இன்னிங்ஸ்)
சுரேஷ் ரெய்னா - 4 (319 இன்னிங்ஸ்)

ஐபிஎல் போட்டியில் இரு வீரர்கள் மட்டுமே ஒரு அணிக்கு எதிராக ஒரே வருடத்தில் இரு சதங்கள் எடுத்துள்ளார்கள்.

விராட் கோலி - குஜராத்துக்கு எதிராக 2016-ல் எடுத்த ரன்கள் 

100*(63)
109(55)

கே.எல். ராகுல் - மும்பைக்கு எதிராக 2022-ல் எடுத்த ரன்கள் 
103*(60)
103*(62)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகக் கடைசி 9 இன்னிங்ஸில் கே.எல். ராகுல்: 3 சதங்கள், 4 அரை சதங்கள்.

94(60)
71*(57)
100*(64)
17(19)
77(51)
60*(52)
21(22)
103*(60)
103*(62)

* மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 16 ஆட்டங்களில் 867 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 135.89. நாட் அவுட் - 6 முறை. ரன்கள் சராசரி - 86.70. சதங்கள் - 3, அரை சதங்கள் - 5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com