ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூருவுக்கு தொடக்கம் மாற்றியும் சிறப்பாக அமையவில்லை. விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

இதையும் படிக்ககோலியைத் தொடரும் சோகம்!

இதன்பிறகு, டு பிளெஸ்ஸி ஆட்டத்தை சற்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பவர் பிளே முடிவுந்தவுடன், குல்தீப் சென் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்தடுத்த பந்தில் டு பிளெஸ்ஸி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தி குல்தீப் சென் அசத்தினார்.

இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ரஜத் படிதார், சூர்யாஷ் பிரபுதேசாய் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். பெங்களூருவின் நம்பிக்கை நாயகனான தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

இதன்பிறகு ஆட்டத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு.

இதன்மூலம், 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் சென் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com