கடைசி பந்தில் குஜராத் அசத்தல் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
கடைசி பந்தில் குஜராத் அசத்தல் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
 இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் பெளலிங்கை தேர்வு செய்தது.
 ஹைதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா-கேப்டன் கேன் வில்லியம்ஸன் தொடக்க பேட்டர்களாக களம் கண்டனர். ஆனால் வழக்கம் போல் பேட்டிங்கில் சொதப்பிய கேன் வில்லியம்ஸன் 5 ரன்களுடன் நடையைக் கட்டினார். ராகுல் திரிபாதி 16 ரன்னுடன் வெளியேறினார்.
 அபிஷேக், மார்க்ரம் அரைசதம் : அதிரடியாக ஆடிய அபிஷேக் 33 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 65 ரன்களை விளாசிய அபிஷேக்கை போல்டாக்கினார் அல்ஸாரி ஜோசப். தொடர்ந்து ஆட வந்த நிக்கோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 3 ரன்களுடனும், வெளியேறினர். எய்டன் மார்க்ரம் 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 56 ரன்களை விளாசி, யாஷ் தயாள் பந்தில் அவுட்டானார்.
 ஷஸாங்க் சிங் அதிரடி: 20-ஆவது ஓவரில் ஷஸாங்க் சிங் 3 சிக்ஸர்களை விளாசிய நிலையில் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 195/6 ஆனது. 6 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 25 ரன்களுடன் ஷஸாங்க்கும், 8 ரன்களுடன் ஜேன்ஸனும் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் ஷமி 3, யாஷ், அல்ஸாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 குஜராத் வெற்றி 199: 196 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க பேட்டர் ரித்திமான் சாஹா மட்டுமே நிலைத்து ஆடினார்.
 ஷுப்மன் கில் 22, கேப்டன் ஹார்திக் பாண்டியா 10, டேவிட் மில்லர் 17, அபிநவ் மனோகர் 0 ரன்களுடன் உம்ரன் மாலிக் பந்தில் அவுட்டாகி திரும்பினர்,.
 ரித்திமான் சாஹா 68: மறுமுனையில் அடித்த ஆடிய சாஹா 1 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 68 ரன்களை விளாசி உம்ரன் பந்தில் போல்டானார்.
 டிவாட்டியா அதிரடி: பின்னர் ராகுல் டிவாட்டியா-ரஷீத் கான் இணை அபாரமாக ஆடி தங்கள் அணிக்குவெற்றியைத் தேடித் தந்தது.
 டிவாட்டியா 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 21 பந்துகளில் 40 ரன்களையும், ரஷீத் கான் 4 சிக்ஸருடன் 11 பந்துகளில் 31 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தனர்.
 கடைசி பந்தில் ரஷீத் கான் சிக்ஸர்: கடைசி பந்தில் 3 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் ஜேன்ஸன் வீசிய பந்தை சிக்ஸராக விளாசினார் ரஷீத் கான். 20 ஓவர்களில் 199/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத்.
 உம்ரன் மாலிக் அசத்தல் 5 விக்கெட்: ஹைதராபாத் தரப்பில் உம்ரன் மாலிக் அசத்தலாக பந்துவீசி 5/25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 முதலிடத்தில் குஜராத்: இந்த வெற்றியால் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஹைதராபாத் அணி 3-ஆம் இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com