மில்லர், தெவாட்டியா அதிரடி: பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மில்லர், தெவாட்டியா அதிரடி: பெங்களூருவை வீழ்த்தியது குஜராத்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் மஹிபால் லோம்ரோர் புதிதாக சேர்க்கப்பட்டார். குஜராத் அணியில் யஷ் தயால் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோருக்குப் பதில் பிரதீப் சங்வான் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டு பிளெஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர், ஜோடி சேர்ந்த கோலி, ராஜத் பட்டிடர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பட்டிடர் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்து 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

பின்னர், வந்த மாக்ஸ்வெலும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 170 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பாக பிரதீப் சங்வான், 19 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து குஜராத் அணியில் சாஹா, சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனால் சாஹா 29 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கில்லும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்சன் தன்பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் ராகுல் தெவாட்டியாவும், மில்லரும் இணைந்தனர்.  இந்த ஜோடி பெங்களூருவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது.

இதனால் குஜராத் அணி 19.3 பந்துகளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39, ராகுல் தெவாட்டியா 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com