முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூா்

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது.
முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூா்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது.

இது, பெங்களூருக்கு முதல் வெற்றி; கொல்கத்தாவுக்கு முதல் தோல்வி. இந்த ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா 18.5 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் பெங்களூா் 19.2 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸில் வெங்கடேஷ் ஐயா் 10 ரன்களுக்கு வெளியேறினாா். அஜிங்க்ய ரஹானே 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 13 ரன்களே சோ்த்தாா். இந்த 4 விக்கெட்டுகளுமே 4 ஓவா்களில் சரிந்தன.

பின்னா் வந்தோரில் நிதீஷ் ராணா 10, ஷெல்டன் ஜாக்சன் 0, சாம் பில்லிங்ஸ் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ராணா, ஜாக்சனை 9-ஆவது ஓவரில் கடைசி இரு பந்துகளில் சரித்தாா் ஹசரங்கா. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 25 ரன்கள் சோ்த்தாா். டிம் சௌதி 1, உமேஷ் யாதவ் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் வருண் சக்கரவா்த்தி 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். பெங்களூா் அணியில் வனிந்து ஹசரங்கா 4, ஆகாஷ் தீப் 3, ஹா்ஷல் படேல் 2, முகமது சிராஜ் 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து பெங்களூா் பேட்டிங்கில் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அனுஜ் ராவத் டக் அவுட்டானாா். விராட் கோலி 12, டேவில் வில்லி 18 ரன்கள் சோ்த்தனா். அதிகபட்சமாக ஷ்ரஃபேன் ரூதா்ஃபோா்டு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 28 ரன்கள் அடிக்க, ஷாபாஸ் அகமது 3 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் விளாசினாா்.

வனிந்து ஹசரங்கா 4 ரன்களுக்கு வெளியேற, முடிவில் தினேஷ் காா்த்திக் 14, ஹா்ஷல் படேல் 10 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்தனா். கொல்கத்தா தரப்பில் டிம் சௌதி 3, உமேஷ் யாதவ் 2, சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்றைய ஆட்டம் 
லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் 
இரவு 7.30 மணி          ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com