ஏறக்குறைய தோனி: தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டும் ஆர்சிபி கேப்டன்

எம்.எஸ். தோனி போல கடினமான சூழலை எளிதாகக் கையாளும் திறமை படைத்தவர் என தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டியுள்ளார்...
ஏறக்குறைய தோனி: தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டும் ஆர்சிபி கேப்டன்

எம்.எஸ். தோனி போல கடினமான சூழலை எளிதாகக் கையாளும் திறமை படைத்தவர் என தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டியுள்ளார் ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்சிஸ். 

நவி மும்பையில் நடைபெற்ற ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு உமேஷ் யாதவும் வருண் சக்ரவத்தியும் 27 ரன்கள் எடுத்து ஓரளவு கெளரவமான ஸ்கோரை அளித்தார்கள். வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

எளிதான இலக்கை விரட்டுவதற்குள் ஆர்சிபி அணிக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் கடைசி ஓவரில் தான் இலக்கை விரட்டியது. ரூதர்ஃபோர்ட் 28, ஷபாஸ் அகமது 27 ரன்கள் எடுத்தார்கள். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியை வெற்றி பெறச் செய்தார். டிம் செளதி 3 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

கடைசி ஓவரில் ஆர்சிபி அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டபோது ரஸ்ஸல் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார் தினேஷ் கார்த்திக். அவரைப் பற்றி ஆர்சிபி அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியதாவது:

நல்ல வெற்றி இது. சிறிய ஸ்கோர்களை விரட்டும்போது நேர்மறை எண்ணங்களுடன் இருக்கவேண்டும். கடைசியில் ஜெயித்துவிடலாம் என்கிற நிலைக்குச் சென்றுவிடக் கூடாது. இன்னும் எளிதாக ஜெயிக்கவே விரும்பினோம். என்ன ஆனாலும் வெற்றி வெற்றிதான். தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் கடைசியில் உதவியது. நிதானமாக இயல்பாக இருந்தார். ரன்களை விரட்டுவது கடினமாக இல்லை. கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட தோனி போலவே சூழலை எளிதாகக் கையாள்கிறார் தினேஷ் கார்த்திக் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com