ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
ஹைதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

ஐபிஎல் போட்டியின் 46ஆவது ஆட்டம் புணேவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். 

ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். இருப்பினும் அபாரமாக விளையாடிய ருதுராஜ் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 57 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ருதுராஜ் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார்.

அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். இவரது விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்தினார். சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. கான்வே 85(55 பந்துகள்), ஜடேஜா ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பின்னர், 203 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா , கேன் வில்லியம்சன் களமிறங்கினர். தொடக்கம் முதலே  இந்த இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் முதல் விக்கெட்டாக அபிஷேக் சர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பொறுமையாக விளையாடிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஹைதராபாத் அணி தடுமாறத் துவங்கியது. 

அடுத்த களமிறங்கிய பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சென்னை அணியின் பந்துவீச்சில் அதிம பவுண்டரிகளை அடிக்க முடியாமல் போனது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 189 ரன்களை எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியைத் தழுவியது.

அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி 66 ரன்கள்  எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌதரி 4 விக்கெட்களையும், மகிஷ் தீக்‌ஷானா 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com