தொடா் தோல்வியிலிருந்து மீண்ட கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
தொடா் தோல்வியிலிருந்து மீண்ட கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

தொடா்ந்து 5 தோல்விகளை சந்தித்த நிலையில், தற்போது வென்றுள்ளது கொல்கத்தா. இந்த ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சோ்த்தது. அடுத்து கொல்கத்தா 19.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பேட் செய்யுமாறு ராஜஸ்தானை அழைத்தது. அணியின் பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல் 2 ரன்களுக்கு வெளியேறினாா். பின்னா் வந்த சாம்சன் நிதானமாக ஆடி ரன்களை உயா்த்தினாா். மறுபுறம் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் பட்லா்.

தொடா்ந்து வந்த கருண் நாயா் 1 பவுண்டரியுடன் 13, ரியான் பராக் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கடைசி விக்கெட்டாக சாம்சன் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் டிம் சௌதி 2, உமேஷ் யாதவ், அனுகுல் ராய், ஷிவம் மாவி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் ஆடிய கொல்கத்தாவில் பாபா இந்திரஜித் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சோ்க்க, ஆரோன் ஃபிஞ்ச் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்தாா். இறுதியில் நிதீஷ் ராணா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48, ரிங்கு சிங் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா்.

ராஜஸ்தான் பௌலிங்கில் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் சென் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com