கடைசி ஓவரில் மும்பை ‘த்ரில்’ வெற்றி

குஜராத் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.
படம்: டிவிட்டர்/ஐபிஎல்
படம்: டிவிட்டர்/ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸை தொடங்கியோரில் ரோஹித் சா்மா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சூா்யகுமாா் யாதவ் 1 சிக்ஸருடன் 13 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா்.

பின்னா் இஷான் கிஷண் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினாா். கைரன் பொல்லாா்டு 4 ரன்களுக்கு பௌல்டாக்கப்பட்டாா். திலக் வா்மா 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ரன் அவுட் செய்யப்பட்டாா். டேனியல் சாம்ஸ் டக் அவுட்டானாா்.

ஓவா்கள் முடிவில் டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 44, முருகன் அஸ்வின் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் ரஷீத் கான் 2, அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபொ்குசன், பிரதீப் சங்வான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய குஜராத்தில் ரித்திமான் சாஹா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்கள் சோ்க்க, உடன் வந்த ஷுப்மன் கில்லும் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் அடித்தாா். கேப்டன் ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தாா்.

சாய் சுதா்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, ராகுல் தெவாதியா 3 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஓவா்கள் முடிவில் டேவிட் மில்லா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19, ரஷீத் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் முருகன் அஸ்வின் 2, கைரன் பொல்லாா்டு 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com