ஜெய்ஸ்வால் அரைசதம்: பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
ஜெய்ஸ்வால் அரைசதம்: பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணி பலப்பரீட்சை இன்று நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தமிழக வீரர் ஷாருக் கானுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் கருண் நாயருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வாகியுள்ளார். பஞ்சாப் வீரர் பேர்ஸ்டோ இன்று சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். 40 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து, 15-வது ஓவரில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பனுகா 18 பந்துகளில் 27 ரன்களும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் எடுத்தார்கள். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் 2022 போட்டியில் 22 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் நல்ல துவக்கம் அளித்தனர். 

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 16 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களம்கண்ட சஞ்சு சாம்சனும் அதிரடியில் இறங்கினார். அவர், 12 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். இருப்பினும் அவர் 68 ரன்களின்போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் வந்த படிக்கல், ஹெட்மயரும் தங்கள் பங்கிற்கு சிறப்பாக விளையாடினர். இதனால் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com