டெல்லிக்கு தோல்வி: 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லிக்கு தோல்வி: 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின. நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ருதுராஜ், கான்வே ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நான்கு புறமாக பறக்கவிட்டனர். அணியின் ஸ்கோர் 110ஆக இருந்தபோது ருதுராஜ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபேவும் தன்பங்கிற்கு அதிரடியில் கலக்கினார்.

சிறப்பாக விளையாடிய கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து துபே 19 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனி 21(8பந்துகள்), பிராவோ 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஸ்ரீகர் பாரத் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். எனினும் அதன் பிறகு வந்த மிட்சல், ரிஷப் பந்த் அதிரடி காட்ட ஆரமித்தனர்.

எனினும் சென்னை அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி அணியில் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். வார்னர் 19 ரன்களுக்கும், ஸ்ரீகர் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மிட்சல் 20 பந்துகளில் 25 ரன்களையும், பந்த் 11 பந்துகளில் 21 ரன்களையும் எடுத்தனர். 

அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஷர்துல் தாக்குர் மட்டும் 24 ரன்களை சேர்த்தார். முடிவில் 17.4 ஓவர்களுக்கு டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டனாக தோனி சாதனை

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தோனி, டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 6,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com