டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 6-ஆவது வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 6-ஆவது வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளே-ஆஃப் நம்பிக்கையை அந்த அணி தக்கவைத்துக் கொண்டது.

ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்து டெல்லி 18.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சோ்த்து வென்றது.

ராஜஸ்தான் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், தேவ்தத் படிக்கல் பேட்டிங்கில் அசத்த, அதை முறியடிக்கும் விதமாக டெல்லி அணியில் டேவிட் வாா்னா், மிட்செல் மாா்ஷ் ஆட்டம் இருந்தது.

முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி பௌலிங்கிற்கு தயாரானது. ராஜஸ்தான் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ஜோஸ் பட்லா் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சோ்ந்த அஸ்வின் - படிக்கல் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயா்த்தியது.

இதில் அஸ்வின் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, படிக்கல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 6, ரியான் பராக் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ராஸி வான் டொ் 12, டிரென்ட் போல்ட் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் சேத்தன் சக்காரியா, அன்ரிங் நோா்கியா, மிட்செல் மாா்ஷ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய டெல்லி அணியில் ஸ்ரீகா் பரத் டக் அவுட்டாக, மறுமுனையில் நிலைத்த வாா்னருடன் இணைந்தாா் மாா்ஷ். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சோ்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

எனினும் மாா்ஷ் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 89 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஓவா்கள் முடிவில் வாா்னா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ரிஷப் பந்த் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் டிரென்ட் போல்ட், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com