ரிவியு எடுக்காததால் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
By DIN | Published On : 12th May 2022 12:42 PM | Last Updated : 12th May 2022 01:11 PM | அ+அ அ- |

தவறவிட்ட ரிவியு
மும்பை : மும்பை டி ஒய் பாட்டில் மைதானத்தில் ராஜஸ்தான் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ரிவியு எடுக்காதது தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
ராஜஸ்தான் 20 ஓவரில் 160 ரன்களை எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் தனது முதல் அரசதத்தை ஐ.பி.எல்.இல் பதிவு செய்தார்.
அடுத்து ஆடிய டெல்லி அணி 18.1 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் மிட்சல் மார்ஷ் அதிகபட்சமாக 89 ரன்களை 62 பந்துகளில் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
டெல்லி அணியின் 3வது ஓவரில் 3வது பந்தை ஏர்க்கராக போல்ட் வீசினார். இந்த பந்தில் எல்பிடபுல்யூக்கு விக்கெட் கேட்கும்போது நடுவர் தர மறுத்து விட்டார். 2 ரிவியுக்கள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் எட்ஜ் என்று நினைத்து அதை அலச்சியமாக விட்டுவிட்டார். ஆனால் பந்து நெராக ஸ்டெம்பை நோக்கி போனது பேடில் பட்டு என்பது பிறகு தான் தெரிந்தது. அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது என்பதை அவர் அப்போது உணரவில்லை. 3 ஓவரிலே மார்ஷ் விக்கெட் எடுத்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும்.
மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது ராஜஸ்தானுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...