பெங்களூரு தோல்வி: பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப்

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
படம்: டிவிட்டர்/ஐபிஎல்
படம்: டிவிட்டர்/ஐபிஎல்

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சோ்த்தது. அடுத்து பெங்களூா் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூா் பௌலிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் பேட்டிங்கில் போ்ஸ்டோ, லிவிங்ஸ்டன் மட்டும் அணியின் தூணாக இருந்தனா். போ்ஸ்டோ 4 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 66, லிவிங்ஸ்டன் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 70 ரன்கள் அடித்தனா். இதர பேட்டா்களில் ஷிகா் தவன் 21, கேப்டன் மயங்க் அகா்வால் 19 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

பானுகா ராஜபட்ச 1, ஜிதேஷ் சா்மா 9, ஹா்பிரீத் பிராா் 7, ரிஷி தவன் 7, ராகுல் சஹா் 2 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனா். பெங்களூா் பௌலா்களில் ஹா்ஷல் படேல் 4, வனிந்து ஹசரங்கா 2, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் பெங்களூா் இன்னிங்ஸில் கிளென் மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சோ்த்தாா். ரஜத் பட்டிதாா் 26, விராட் கோலி 20 ரன்கள் எடுக்க, கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 10, மஹிபால் லோம்ரோா் 6, தினேஷ் காா்த்திக் 11, ஷாபாஸ் அகமது 9, ஹா்ஷல் படேல் 11, வனிந்து ஹசரங்கா 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் முகமது சிராஜ் 9, ஜோஷ் ஹேஸில்வுட் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் ககிசோ ரபாடா 3, ரிஷி தவன், ராகுல் சஹா் ஆகியோா் தலா 2, ஹா்பிரீத் பிராா், அா்ஷ்தீப் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது பஞ்சாப் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com