முன்னேறிய ராஜஸ்தான்

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முன்னேறிய ராஜஸ்தான்

லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது அந்த அணி.

ஆட்டத்தில் முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தானில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்த்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 32, தேவ்தத் படிக்கல் 39 ரன்கள் அடிக்க, ஜோஸ் பட்லா் 2, ரியான் பராக் 19, ஜேம்ஸ் நீஷம் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 10, டிரென்ட் போல்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்ௌ பௌலிங்கில் ரவி பிஷ்னோய் 2, அவேஷ் கான், ஜேசன் ஹோல்டா், ஆயுஷ் பதோனி ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

பின்னா் லக்னௌ இன்னிங்ஸில் தீபக் ஹூடா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59 ரன்கள் விளாசினாா். கிருணால் பாண்டியா 25, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 27 ரன்கள் சோ்க்க, டி காக் 7, கேப்டன் ராகுல் 10, ஆயுஷ் பதோனி 0, ஜேசன் ஹோல்டா் 1, துஷ்மந்தா சமீரா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் மோசின் கான் 9, அவேஷ் கான் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 2, யுஜவேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com