மிட்செல் மார்ஷ் அரைசதம்: பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 16th May 2022 09:38 PM | Last Updated : 16th May 2022 09:38 PM | அ+அ அ- |

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரின் 64 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து வந்த மாா்ஷ், சர்ஃபராஸ் கானுடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி பெஞ்சாப் அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டது. டெல்லி அணியின் ஸ்கோர் 51 ரன்களாக இருந்தபோது சர்ஃபராஸ் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த நிலையில் களம்கண்ட லலித் யாதவும் மிட்செல் மார்ஷுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இருப்பினும் யாதவ், 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
மறுமுறையில் சிறப்பாக விளையாடிய மார்ஷ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அக்ஷர் படேல் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...