காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்தியர்: சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்திய வீரர்களில் ஒருவர் என ஹர்ஷல் படேலைப் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்

Published On :

கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்திய வீரர்களில் ஒருவர் என ஹர்ஷல் படேலைப் பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்

ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆர்சிபி அணியின் ஹர்ஷல் படேல், 8 விக்கெட்டுகளுடன் நடராஜனுடன் இணைந்து 4-ம் இடத்தில் உள்ளார். அதேபோல எகானமியில் 9.46 என 6-ம் இடத்தில் உள்ளார். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 32 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி, ரூ. 10.75 கோடிக்கு ஹர்ஷல் படேலைத் தேர்வு செய்தது. 

தன்னுடைய யூடியூப் சேனலில் ஹர்ஷல் படேல் பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

ஹர்ஷல் படேலின் பந்துவீச்சு ஒவ்வொரு ஆட்டத்திலும் மெருகேறிக்கொண்டு வருகிறது. பந்துவீச்சில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசினார். கடைசிக்கட்ட ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசும் இந்திய வீரர்களில் அவரும் ஒருவர் என்றார். பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார் ஹர்ஷல் படேல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.