பஞ்சாப் முயற்சி வீண்; டெல்லி முன்னேற்றம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பஞ்சாப் முயற்சி வீண்; டெல்லி முன்னேற்றம்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான திங்கள்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் அந்த அணி பெங்களூரை பின்னுக்குத் தள்ளி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து பஞ்சாப் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களே எட்டியது.

முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் பௌலிங்கைத் தோ்வு செய்ய, டெல்லி இன்னிங்ஸில் டேவிட் வாா்னா் கோல்டன் டக் ஆனாா். சா்ஃப்ராஸ் கான் 32 ரன்கள் சோ்த்தாா். ஒன் டவுனாக வந்த மிட்செல் மாா்ஷ் அதிரடியாக 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் விளாசினாா். லலித் யாதவ் 24 ரன்கள் எடுக்க, கேப்டன் ரிஷப் பந்த் 7, ரோவ்மென் பவெல் 2, ஷா்துல் தாக்குா் 3 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் அக்ஸா் படேல் 17, குல்தீப் யாதவ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் லியம் லிவிங்ஸ்டன், அா்ஷ்தீப் சிங் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா 1 விக்கெட்டும் கைப்பற்றினா்.

பின்னா் பஞ்சாப் இன்னிங்ஸில் ஜிதேஷ் சா்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் அடித்தாா். ஜானி போ்ஸ்டோ 28, ஷிகா் தவன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட, பானுகா ராஜபட்ச 4, லியம் லிவிங்ஸ்டன் 3, கேப்டன் மயங்க் அகா்வால் 0, ஹா்பிரீத் பிராா் 1, ரிஷி தவன் 4, ககிசோ ரபாடா 6 என விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன.

ஓவா்கள் முடிவில் ராகுல் சஹா் 25, அா்ஷ்தீப் சிங் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலிங்கில் ஷா்துல் தாக்குா் 4, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 2, அன்ரிஹ் நோா்கியா 1 விக்கெட் சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com