பிளே ஆஃபில் 2 - ஆவது அணி லக்னௌ

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ், 2-ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றது. 
பிளே ஆஃபில் 2 - ஆவது அணி லக்னௌ

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ், 2-ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றது. 
ஆட்டத்தில் முதலில் லக்னெள 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் சேர்த்தது. அடுத்து கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே எட்டியது. 
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த லக்னெளவில் டி காக் 10 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 140 ரன்களை விளாச, உடன் வந்த ராகுல் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்தார். 
ஐபிஎல் போட்டியின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (210) சேர்த்து சாதனை படைத்தது இந்த பார்ட்னர்ஷிப். அத்துடன் நடப்பு சீசனில் அதிக ஸ்கோரை (140*) டி காக் பதிவு செய்தார். 
பின்னர் கொல்கத்தா இன்னிங்ஸில் நிதீஷ் ராணா 42, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 50, சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் சேர்த்து வெற்றிக்காக முயற்சித்தனர். கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் - சுனில் நரைன் கூட்டணி வெற்றியை நெருங்கியது. ஆனால் 40 ரன்கள் அடித்திருந்த ரிங்கு சிங் அவுட்டாக, ஆட்டத்தின் போக்கு மாறியது. 
கடைசி பந்தில் 3 ரன்கள் தேவையிருக்க, களம் புகுந்த உமேஷ் யாதவ் பெளல்டானார். முன்னதாக அபிஜித் தோமர் 4, ஆண்ட்ரே ரùஸல் 5 ரன்கள் அடிக்க, முடிவில் சுனில் நரைன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். லக்னெள பெளலிங்கில் மோசின் கான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 3, கிருஷ்ணப்பா கெளதம், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இந்த ஆட்டத்தில் லக்னெள இன்னிங்ஸில் டி காக் கொடுத்த கேட்ச்சை அபிஜீத் தவறவிட்டதும், கொல்கத்தா இன்னிங்ஸில் ரிங்கு சிங் கேட்ச்சை எவின் லீவிஸ் அசத்தலாகப் பிடித்ததுமே ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பதில் முக்கியமானதாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com