பாண்டியா, ரஷித் கான் அதிரடி: குஜராத் 168 ரன்கள் விளாசல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.
பாண்டியா, ரஷித் கான் அதிரடி: குஜராத் 168 ரன்கள் விளாசல்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் ரித்திமான் சஹா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். கில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சஹா மற்றும் மேத்யூ வேட் சற்று அதிரடி காட்டினர். வேட் 16 ரன்கள் எடுத்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பவர் பிளே முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. சஹா பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான அடித்தளத்தை அமைத்தார். ஆனால், அவர் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

இதன்பிறகு, பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தனர். 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து கடைசி நேர அதிரடிக்கு இருவரும் தயாராகினர்.

ஆனால், மில்லர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது வனிந்து ஹசரங்கா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராகுல் தெவாட்டியா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால், பாண்டியா மற்றும் ரஷித் கான் குஜராத்துக்கு சிறப்பான பினிஷிங்கை தந்தனர். சித்தார்த் கௌல் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி அடித்த பாண்டியா 41-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன.

ஜோஷ் ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் பாண்டியா மற்றும் ரஷித் கான் தலா 1 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரிலும் 17 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களும், ரஷித் கான் 6 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com