ஐபிஎல்: கடைசி ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்
By DIN | Published On : 20th May 2022 07:23 PM | Last Updated : 20th May 2022 07:43 PM | அ+அ அ- |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 68ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை பர்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக ராயுடு இடம்பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 4ல் வெற்றியும், 9 தோல்வியும் அடைந்துள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது முறையாக சிஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரை விட்டு வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.