கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: சஞ்சு சாம்சன் சாதனை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 108 போட்டிகளில் விளையாடி இதுவரை 2,812 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங்  சராசரி 29.91 ஆகும். அவர் 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். அவர் அதிகபட்சமாக 119 ரன்கள் குவித்துள்ளார். 

இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானேவை பின்னுக்குத் தள்ளி அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அஜிங்க்யா ரஹானே ராஜஸ்தான் அணிக்காக 2,810 ரன்கள் குவித்துள்ளார். அவர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தப் பட்டியலில் ஷேன் வாட்சன் 2,372 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

சஞ்சு சாம்சன் இந்த சாதனையை ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியின்போது நிகழ்த்தினார்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது. இருப்பினும், ராஜஸ்தான் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இன்னும் வாய்ப்பு இருக்கிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். ஜாஸ் பட்லரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. 

இருப்பினும், குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் அதிரடியால் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இணை 106 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டது.

இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 421 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com