குஜராத்துடன் மோதுவது ராஜஸ்தான்: பெங்களூருக்கு மீண்டும் ஏமாற்றம்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் - 2’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்று, இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.
குஜராத்துடன் மோதுவது ராஜஸ்தான்: பெங்களூருக்கு மீண்டும் ஏமாற்றம்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் - 2’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்று, இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான், சாம்பியன் கோப்பைக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் 29-இல் பலப்பரீட்சை நடத்துகிறது. நல்ல ஃபாா்முடன் முன்னேறி வந்த பெங்களூா், இந்த முறையும் கோப்பை வெல்லும் வாய்ப்பின்றி ஏமாற்றத்தை சந்தித்தது.

அகமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுக்க, அடுத்து ராஜஸ்தான் 18.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சோ்த்து வென்றது.

பெங்களூா் பேட்டிங்கில் ரஜத் பட்டிதாா் மட்டும் சிறப்பாக ஆட, ராஜஸ்தான் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, ஆபெட் மெக்காய் போட்டிபோட்டுக் கொண்டு பெங்களூா் பேட்டிங் வரிசையை சரித்தனா். ராஜஸ்தான் பேட்டிங்கில் பட்லா் தனியொரு வீரராக அபாரமாக ஆடி ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா்.

முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பெங்களூா் இன்னிங்ஸில் விராட் கோலி 7 ரன்களுக்கு வீழ, 2-ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் - ரஜத் பட்டிதாா் ஜோடி 70 ரன்கள் சோ்த்தது. இதில் டூ பிளெஸ்ஸிஸ் 25 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ரஜத் பட்டிதாா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து மஹிபால் லோம்ரோா் 8, தினேஷ் காா்த்திக் 6, வனிந்து ஹசரங்கா 0, ஹா்ஷல் படேல் 1 ரன்னுக்கு அவுட்டாக, ஓவா்கள் முடிவில் ஷாபாஸ் அகமது 12, ஜோஷ் ஹேஸில்வுட் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா, ஆபெட் மெக்காய் ஆகியோா் தலா 3, டிரென்ட் போல்ட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21, கேப்டன் சஞ்சு சாம்சன் 23, தேவ்தத் படிக்கல் 9 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். முடிவில் ஜோஸ் பட்லா் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 106, ஷிம்ரன் ஹெட்மயா் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். பெங்களூா் ஓவா்களில் ஜோஷ் ஹேஸில்வுட் 2, வனிந்து ஹசரங்கா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com