ஐபிஎல் நிறைவு விழாவில் மகனுடன் பாடிய ஏ.ஆர். ரஹ்மான்
By DIN | Published On : 29th May 2022 07:59 PM | Last Updated : 29th May 2022 07:59 PM | அ+அ அ- |

கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கச்சேரியில், அவரது மகன் ஏ.ஆர். அமீனும் கலந்துகொண்டு மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடல் பாடினார்.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
படிக்க | ஐபிஎல் நிறைவு விழாவில் ஒலித்த தமிழ்ப் பாடல்கள்
இதில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நடனமாடினர். அதேபோன்று ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.
இதில் இசைத் துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பாடல்களைப் பாடினர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தே மாதரம் என தமிழில் பாடி தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார்.
படிக்க | ஐபிஎல் நிறைவு விழாவில் 'வாத்தி கம்மிங்..' பாடல்
இதில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் கலந்துகொண்டு பாடல் பாடினார். ஐபிஎல் நிறைவு விழா இசை நிகழ்ச்சியில் இருவரும் ஒரே மேடையில் பாடல் பாடியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.