ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை தில்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது.
ஹாரி  ப்ரூக் (கோப்புப்படம்)
ஹாரி ப்ரூக் (கோப்புப்படம்)படம் | ஐபிஎல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை தில்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தில்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது.

ஹாரி  ப்ரூக் (கோப்புப்படம்)
எதிர்பார்ப்புகளை அழுத்தம் என நினைக்கவில்லை: யஷ் தாக்குர்

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். தில்லி கேப்பிடல்ஸ் அவரை ரூ. 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஹாரி ப்ரூக்குப் பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் அணியில் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதாகும் லிஸாத் வில்லியம்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com