எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன்செய்த ரவீந்திர ஜடேஜா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.
எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன்செய்த ரவீந்திர ஜடேஜா!
படம் | ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன்செய்த ரவீந்திர ஜடேஜா!
எம்.எஸ்.தோனியால் அதிர்ந்த சேப்பாக்கம்; காதுகளை மூடிக்கொண்ட ஆண்ட்ரே ரஸல்!

இந்த நிலையில், நேற்றையப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்றதன் மூலம் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.

ஆட்டநாயகன் விருதைப் பெறும் ரவீந்திர ஜடேஜா
ஆட்டநாயகன் விருதைப் பெறும் ரவீந்திர ஜடேஜா படம் | ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை அதிக முறை ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி தன்வசம் வைத்திருந்தார். அவர் சென்னை அணிக்காக இதுவரை 15 முறை ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார். சென்னை அணிக்காக 15-வது முறையாக ஆட்டநாயன் விருதினை வென்று தோனியின் இந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார்.

சிஎஸ்கேவுக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருதினை வென்றவர்கள்

எம்.எஸ்.தோனி - 15 முறை

ரவீந்திர ஜடேஜா - 15 முறை

சுரேஷ் ரெய்னா - 12 முறை

ருதுராஜ் கெய்க்வாட் - 10 முறை

மைக்கேல் ஹஸ்ஸி - 10 முறை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com