அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரியாக பந்துவீச முடியவில்லை: ரஷித் கான்

ஆட்ட நாயகன் விருது பெற்ற பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் ரஷித் கான் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரியாக பந்துவீச முடியவில்லை: ரஷித் கான்
PTI

ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.

முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 199 ரன்களை எடுத்து வென்றது.

பௌலிங்கில் 4 ஓவருக்கு 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த ரஷித் கான் பேட்டிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமானார். கடைசி ஓவரில் அசத்தலாக பேட்டிங் செய்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சரியாக பந்துவீச முடியவில்லை: ரஷித் கான்
தோல்விக்கு காரணம் என்ன? சஞ்சு சாம்சன் கிண்டலான பதில்!

ஆட்ட நாயகன் விருது பெற்ற பிறகு ரஷித் கான் பேசியதாவது:

போட்டியில் வெற்றி பெருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குறது. நான் எங்கு நினைத்தேனோ அங்கு பந்தினை வீச முடிந்தது இன்று. கடைசி 3-4 மாதங்களாக நான் அவ்வளவாக பந்து வீசவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு என்னால் பந்தினை சரியாக பிடிக்க முடியவில்லை. ஆனால், இன்றைய போட்டி நன்றாக இருந்தது; எனது சிறந்த செயல்திறனை கொடுக்க முடிந்தது. எனது பௌலிங்கினை நினைத்து நான் மிகவும் மகிழ்ந்தேன். போட்டியில் வெல்ல 3-4 சிக்ஸர்கள் போதுமானதாக இருந்ததால் நான் நேர்மறையான சிந்தனையுடன் இருந்தேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com